உலகப்புகழ்பெற்ற சின்னம் தாஜ்மஹால். உலக அதிசயங்கள் 7ல் தாஜ்மஹாலும் ஒன்றாக உள்ளது. முகலாய மன்னர் ஷாஜகனால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இம்மாளிகைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த திங்களன்று கிருஷ்ணர் வேடத்தில் ஒரு சிறுவன் தன் பெற்றோர்களுடன் வந்துள்ளான்.அவனை உள்ளே விட மறுத்து அதிகாரிகள் வெளியே அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவத்துக்கு ஆக்ராவின் இந்து அமைப்புகள் கண்டன குரல் எழுப்பியுள்ளன. ‘‘ஏஎஸ்ஐ அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். மறுத்தால் தாஜ்மகாலுக்குள் எந்த பார்வை யாளரையும் நுழைய விடாமல் போராட்டம் நடத்துவோம்’’ என்றுராஷ்டிரிய இந்து பரிஷத்(இந்தியா) அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆக்ரா மண்டல ஏஎஸ்ஐ துணை கண்காணிப்பாளர் வசந்த் கே.ஸ்வர்ன்கர் இது குறித்து கூறும்போது, ‘‘தாஜ்மகாலில் எந்த விளம்பர நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. இதற்கு அலுவலகத்தில் முன்கூட்டியே சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த விதிகளை சுட்டிக் காட்டியே அனுமதி மறுக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.













