---Advertisement---

கண்ணாடி ரூமில் பாடிய எஸ்.பி.பி இப்போ கண்ணாடி பெட்டியிலா- கண்கலங்கிய கே.எஸ் ரவிக்குமார்

Published on: September 26, 2020
---Advertisement---

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் நேற்று மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த 52 நாட்களாக உடல் நலிவுற்று இருந்தார். நுரையீரல் செயல்பாடுகள் மோசமானதால் நேற்று எஸ்.பி.பி உயிரிழந்தார்.

அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.எஸ்.பி.பி குறித்து வீடியோ வெளியிட்டுள்ள இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தெனாலி படத்தில் அவர் பாடிய பாடல் குறித்து சுவாரஸ்யமான விசயத்தை பகி்ர்ந்துள்ளார்.

தெலுங்கு அவருக்கு தாய்மொழியாக இருந்தாலும் தமிழ் மேல் மிகுந்த பற்று வைத்திருந்தார். ‘தெனாலி’ படத்தின் போது ஏ.ஆர்.ரஹ்மானும் இசைக்கூடத்தில் இருந்தோம். அப்போது அவர் கண்ணாடி…. (கண்ணாடி என்றதும் இப்போ அவர் கண்ணாடி பெட்டிக்குள்ள இருக்குறது நியாபகம் வந்துடுச்சு. இது ஒரு கனவா இருக்கக்கூடாதா ? என்று கண்கலங்கினார். ) பாடல் குறித்து இந்த வரிகளை இன்னும் அழுத்தமாக பாட முடியுமா என்று கேட்ட போது, ‘ரவிக்குமார் சார் உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி பாடிக் கொடுத்துடுறேன்’ என்றார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!