கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பட்டாசுக் கடை விபத்தில் காலித், ஷா ஆலம், சையத் அலி, ஷேக் பஷீர், அய்யாசாமி உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அய்யாசாமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார்.
பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் அனுமதியை மீறி அதிக அளவில் பட்டாசு வைத்திருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.













