ரஜினி கட்சி தொடங்குவாரா மாட்டாரா என நினைக்கும்போது அதில் ஏதேனும் டவுட் வந்தால் நிருபர்கள் மைக்கை எடுத்துக்கொண்டு ஓடுவது திரு. தமிழருவி மணியனிடம்.
நீண்ட நாட்களாக அரசியல்வாதியாக வலம் வந்த இவர் அதையெல்லாம் மறந்துவிட்டு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என உறுதியாக சொல்லி வந்தார்.
சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் 31ம் தேதி கட்சி பற்றி அறிவிப்பேன் என சொல்லும்போது கூட தமிழருவி மணியனையும், அர்ஜூன்மூர்த்தியையும் வைத்துக்கொண்டே பேட்டி கொடுத்தார்.
நீண்ட நாட்களாக எல்லா மீடியாக்களிலும் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி டீடெய்லாக பேட்டி கொடுத்து வந்த தமிழருவி மணியனை சமூக வலைதளவாசிகள் தமிழருவி மணியன் எங்கே எங்கே என ரஜினி தன் நிலையை அறிவித்தவுடன் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழருவி மணியன் அரசியல் ரீதியாக நான் இறந்துவிட்டேன் இப்போது தனி மனிதன் மட்டுமே நான் செல்கிறேன் வரப்போவதில்லை என கூறியுள்ளார்.













