---Advertisement---

இந்த சிலைகளுக்கு அனுமதி கிடையாது… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

By Sri
Published on: September 2, 2024
---Advertisement---

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருக்கின்றது.

இந்தியாவில் இந்து சமூகத்தினரால் மிகப் பிரசித்தியாக கொண்டாடப்படும் திருவிழா விநாயகர் சதுர்த்தி.  விநாயகர் சிலையை நிறுவி ஏழு நாட்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி அந்த சிலையை எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் பெரிய பெரிய சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை பகுதியில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது காவல்துறை சார்பில் மூன்று அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் கொடுத்திருந்தார்கள்.

வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. மேலும் எளிதில் மக்கக்கூடிய சிலைகளுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!