சினிமாவில் தனது கடின உழைப்பால் நகைச்சுவை நடிகராக வலம் வந்து, தற்போது முன்னணி கதாநாயகனாக முத்திரை பதித்து வரும் நடிகர் சூரி (Soori), சமீபத்தில் நடைபெற்ற ‘மண்டாடி’ (Mandadi) திரைப்படத்தின் வெற்றி விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தனது சினிமா பயணம் மற்றும் பெயர் மாற்றம் குறித்த சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, “ஆரம்பத்தில் உங்களை ‘பரோட்டா சூரி’ என்று அழைத்தார்கள். இப்போது சூரி என்று அழைக்கிறார்கள். இந்த மாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சூரி, “பரோட்டா சூரி என்று எதுவுமே கிடையாது. சூரி என்பதுதான் என் பெயர். மக்கள் தான் என்னை அப்படி அழைத்தார்கள். ஆரம்பத்திலிருந்தே என் பெயரும் பட்டமும் ஒன்றுதான். ஒரு நகைச்சுவை நடிகராக இருந்த என்னை, மக்கள் தான் இன்று இந்த இடத்திற்கு அதாவது கதாநாயகனாக உயர்த்திவிட்டுள்ளனர். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும், மண்டாடி படப்பிடிப்பின் போது படகிலிருந்து விழுந்த அனுபவம் குறி கேட்டதற்கு, நகைச்சுவையாக “நல்லா வலிச்சுது…” என்று பதிலளித்து அரங்கைச் சிரிக்க வைத்தார்.













