---Advertisement---

சென்னை கடற்கரைகளுக்கு லீவ் – கொரோனா பீதியால் அரசு முடிவு !

By Sri
Published on: March 21, 2020
---Advertisement---

சென்னையில் உள்ள கடற்கரைகளில் மக்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில் மக்கள் தாங்களாகவே ஊரடங்கை செயல்படுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே நடமாடாமல் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மோடியின் பேச்சுக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

தமிழகத்திலும் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவித்து விட்டன. இந்நிலையில் சென்னையில் மக்கள் கடற்கரைகளில் கூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று மாலை 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மக்களுக்கு அனுமதி இல்லை என மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.