---Advertisement---

நீட் தேர்வு விவகாரம்-முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்

Published on: February 12, 2022
---Advertisement---

நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவிப்பதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தொடர்பாக திமுக என்ன வழக்கை தொடுத்தது? எங்கே தொடுத்தது? வழக்கு எண் என்ன? திமுகவின் சார்பில் என்ன வாதம் வைக்கப்பட்டது? என்பதையெல்லாம் திமுக தலைவர் நாட்டு மக்களுக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்த வேண்டும். வரலாறு தெரியாமல் மனம் போன போக்கில் பேச வேண்டாம் எனவும் அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.