கடந்த 3 நாட்களில் மட்டும் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தெற்கு மும்பையான நவி மும்பையுடன் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் 21.8 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச்சாலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கடலுக்கு மேல் அமைக்கப்பட்ட மிக நீளமான சாலை என்ற பெயரை இந்த அடல் சேது கடல் பாலம் பெற்றிருக்கின்றது.
தற்போது இந்த பாலத்தின் நடுப்பகுதிக்கு செல்லும் சிலர் அங்கிருந்து கடலுக்குள் குறித்து தற்கொலை செய்து வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நேற்று காலை தொழிலதிபர் பிலிப் ஷா என்பவர் இந்த பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்ட்ரல் மும்பையின் மதுகா பகுதியில் வசித்து வந்த பிலிப் ஷா தனது காரில் அடல் சேது பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.
சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இறந்தவர்கள் பாலத்தின் மீது கார் நிற்பதை கண்காணித்து மீட்பு குழுவினருக்கு தெரிவித்தார்கள். பின்னர் மீட்பு குழுவினர் அங்கு சென்று கடலில் குதித்த நபரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வங்கி மேலாளர் ஒருவர் பணிச்சுமை மற்றும் அழுத்தம் காரணமாக அடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
3 நாட்களில் மட்டும் 2 பேர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு ஒரு பெண் திடீரென்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது ஒருவர் அவரின் முடியை பிடித்து இழுத்து காப்பாற்றினார். போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அது தற்கொலை செய்து கொள்ளும் பகுதியாக மாறி வருகின்றது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகிறார்கள்.