---Advertisement---

ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என்று வரவேற்கிறேன்… முதல்வர் மு.க ஸ்டாலின்..!

By Sri
Published on: September 26, 2024
---Advertisement---

இன்று செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் அவரை வரவேற்பதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருக்கின்றார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்து இருக்கின்றது. அமலாக துறையானது அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில் அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக உள்ளது.

எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதி செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்துள்ளது. கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என்று வரவேற்கின்றேன். உன் தியாகம் பெரியது.. உறுதி அதனிலும் பெரியது..” என்று தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Action King Arjun.

பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்: அடுத்தடுத்த புதிய பட வாய்ப்புகள்!

'ஜெயிலர் 2' சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்திப் படம்.

தனிப்பட்ட நேர்காணலைத் தவிர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: சன் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’!

Editorial visual featuring Vijay Sethupathi from Inji Vellam.

மணி ரத்னம் படத்திற்காக சம்பளத்தைக் குறைத்த விஜய் சேதுபதி: ‘இஞ்சி வெல்லம்’ ரிலீஸ் அப்டேட்!

Editorial visual featuring Kamal Haasan in Indian 3.

பொங்கல் ரிலீஸுக்குத் திட்டமிடப்படும் உலகநாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 3’: அதிகாரப்பூர்வ அப்டேட்!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சென்சார் சான்றிதழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’!

Editorial visual featuring Vijay Sethupathi's Baththa.

20 கோடியை நெருங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’: முதல் வார பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!