---Advertisement---

போராடுவதை விட்டுட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்த சொன்ன மம்தா… பெண் மருத்துவரின் தாய் கேட்ட கேள்வி…!

By Sri
Published on: September 10, 2024
---Advertisement---

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்துமாறு மம்தா பானர்ஜி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற நபர் கைது செய்யப்பட்டு சிபிஐ போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும் தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி மாநிலத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று தான் வருகின்றது.

இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்து இருக்கின்றது. இந்நிலையில் மக்கள் போராட்டத்தில் கவனம் செலுத்துவதை கைவிட்டு எதிர்வரும் துர்கா பூஜை பண்டிகையில் கவனம் செலுத்தும் படி மம்தா பானர்ஜி கூ கூறியிருப்பது மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

மேற்கு வங்கத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் மம்தா இப்படி கூறி இருக்கின்றார். இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தாயார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து அவர் கூறியதாவது ‘நாங்கள் இதுவரை எங்கள் மகளுடன் துர்கா பூஜை பண்டிகையை கொண்டாடி வந்தோம்.

இனி வரும் வருடங்களில் அது நடக்கப்போவதில்லை. மம்தா குடும்பத்தில் இது போன்ற நடந்திருந்தால் இப்படி பேசி இருப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் மகளை அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது அந்த கொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்தை கெடுக்க பார்க்கிறார்கள்’ என்று பெண் மருத்துவரின் தாயார் வேதனையுடன் பகிர்ந்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!