---Advertisement---

தூக்கமே வரல… மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே சென்று பேசிய மம்தா பானர்ஜி…!

By Sri
Published on: September 14, 2024
---Advertisement---

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கே நேரில் சென்று பேசியிருக்கின்றார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஜூனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான ஸ்வஸ்திய பவன் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராடும் மாணவர்களின் பிரதிநிதிகளை 2 நாட்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் வைத்து சந்தித்து பேசுவதற்கு மம்தா அழைத்திருந்தார். ஆனால் அந்த சந்திப்பை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே நாங்கள் வருவோம் என்று கூறிய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் இரண்டு மணி நேரமாக மம்தா காலியான இருக்கைகளுக்கு முன்பு காத்திருந்தார்.

இதற்கிடையே மருத்துவர்கள் போராட்டத்தால் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை கிடைக்காமல் இதுவரை உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த 29 பேரின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் கேட்காமல் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மருத்துவர்களை சந்திக்க மம்தா பானர்ஜி நேற்று நேரிலேயே சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் முன்பு உரையாற்றிய மம்தா நான் உங்களின் மூத்த சகோதரியாக இங்கு வந்திருக்கின்றேன். முதலமைச்சராக அல்ல, எனது பதவி பெரிது கிடையாது. நேற்று இரவு நீங்கள் கொட்டும் மழையில் போராடிக் கொண்டிருந்தீர்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள்... என்னைக்கு தெரியுமா..?

இதனால் நேற்று நான் தூங்கவே இல்லை. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள் என்று கூறுவதற்காக இங்கு வந்திருக்கின்றேன். உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று நான் வாக்களிக்கிறேன். உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்கும் என்று கூறியிருந்தார். மாநில அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் நல வாரியங்களை உடனடியாக நான் கலைப்பதாக மம்தா தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சினையை தீர்க்க இதுவே தனது கடைசி முயற்சி எனக் கூறியிருந்தார். பின்னர் மம்தா அங்கிருந்து சென்றதைத் தொடர்ந்து ஊடகத்திடம் பேசிய மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் எங்களின் கோரிக்கைகளில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!