Latest News
எதிரே ரயில்… மெட்ரோ டிராக்கில் ஓடிய பெண்… குண்டுகட்டாக தூக்கி வந்த அதிகாரிகள் வைரல் வீடியோ…!
மெட்ரோ டிராக்கில் ரயில் எதிரே வரும்போது ஓடிய பெண்ணை அதிகாரிகள் சேர்ந்து குண்டுகட்டாக தூக்கி வந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டெல்லியில் எதிர் திசையில் மெட்ரோ ரயில் வந்து கொண்டிருக்கும் போது அதை நோக்கி ரயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த புதன்கிழமை மதியம் ராஜேந்திரன் நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
இந்த சம்பவத்தில் ரயில் தளத்தின் அருகே ஓடிக்கொண்டிருந்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்ஃபார்முக்கு வந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த பெண்ணை பின்னர் அதிகாரிகள் மெட்ரோ போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கிய மெட்ரோ போலீஸ் பெற்றோர்களிடம் அவரை ஒப்படைத்தார்கள். தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த பெண் முயற்சி செய்தாரா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இது குறித்து அந்த பெண்ணிடம் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மன அழுத்தத்தின் காரணமாக இது போன்ற முடிவை அவர் எடுத்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.