கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் கேரள முதல்வர் பினராயி விஜயன் 20000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இந்த வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக் கண்டுபிடிக்கப்பட்டு இது மூன்றாவது வாரம் . இதுவரை கிட்டத்தட்ட 150 பேர் வரைப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். அங்கு இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலும் வைரஸ் பரவலைத் தடுக்க மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடுமையாக சரிந்துள்ள பொருளாதாரத்தால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
- கொரோனா வைரஸ் 20,000 கோடி ரூபாய்க்கான திட்டத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
- மாநிலம் முழுவதும் ஆயிரம் ஹோட்டல்கள் திறக்கப்பட்டு, அதில் அனைவருக்கும் 20 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
- 500 கோடி ரூபாய்க்கு மெடிக்கல் பேக்கேஜ்
- எல்லா குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கான இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும்.
- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதி உதசி வழங்கப்படும்.
- முதியோர் பென்சன் பெறுபவர்களுக்கு இரண்டு மாத பென்சன் சேர்த்து வழங்கப்படும். அதற்காக, 1,320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- நூறு நாள் வேலை உறுதித்திட்ட தொழிலாளர்களுக்கென 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவரின் இந்த திட்டங்களுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் கிடைத்துள்ளன.







