---Advertisement---

ஜேம்ஸ் வசந்தன் அப்பவே அப்படியாம்!…பின்ன அப்பவே இளையராஜாவே விசாரிச்சிட்டு போயிருக்காரே…

Published on: May 6, 2024
ilayaraja
---Advertisement---

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவருக்குள்ளே இப்படி ஒரு இசையமைக்கும் திறமை இருக்கிறது என்பதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டிய படம் “சுப்பிரமணியபுரம்”. பின்னணி இசை, பாடல்கள் இவற்றை கேட்கும் பொழுது யார் இந்த படத்திற்கு இசையமைத்தது? என உற்று நோக்க வைத்தது.

subramaniapuram
subramaniapuram

அவரது பெயரை கேட்ட பிறகு தான் அட இது நம்ம ஜேம்ஸ் வசந்தன் அல்லவா. அவரிடம் இல்லாத திறமை எது தான்? என வியக்க வைத்தது அந்த படம். தனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவத்தினை நினைவு கூர்ந்து இருப்பார் ஜேம்ஸ் வசந்தன்.

கல்லூரிகளுக்கு இடையிலான இசை போட்டி திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆண்டு தோறும் நடக்குமாம். திருவிழா போல் கொண்டாடப்படும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜேம்சஸ் வசந்தன் சென்றிருக்கிறார்.

இவரது கல்லூரி சார்பில் வேறு யாரும் பாட வராததால் அவர் மேடை ஏற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம். அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்தது இளையராஜாவாம். இளையராஜா உடன் கங்கை அமரனும் வந்திருக்கிறார். நிகழ்ச்சியை துவங்க இசைக்கருவியை தயார் செய்து கொண்டிருந்தார்களாம் ஜேம்ஸ் வசந்தன் குழுவினர்.

அப்பொழுது ‘கிதார்’ கருவி சரியாக செயல்படவில்லையாம். இளையராஜா கங்கைமரனை பார்த்து அது என்னவென்று சென்று பார் என சொன்னாராம்.உடனே மேடை ஏறி கங்கை அமரன் கிட்டாரிலிருந்த பழுதை நீக்கி கொடுத்தாராம்.

பின்னர் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலை ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் முன்னிலையில் பாடி இருந்திருக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு இளையராஜா ஜேம்ஸ் வசந்தன் பற்றிய விவரங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கிச்சென்றாராம்.

இளையராஜா முன்னிலையில் பாடல் பாடியதையே நம்பமுடியாமல் நின்ற வசந்தனுக்கு தனது விவரங்களை அவரே தேடி வந்து கேட்டு சென்றது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்ததாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!