---Advertisement---

செந்தில் பாலாஜி வழக்கு… அமலாக்கத்துறை பதில் அளிக்கணும்… சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

By Sri
Published on: August 7, 2024
---Advertisement---

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துரை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கின்றது.

தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டிருந்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகின்றது. தன்னை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை ஹை கோர்ட்டில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம் எஸ் சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் செந்தில் பாலாஜி தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.