---Advertisement---

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை உடனே மீட்க வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

By Sri
Published on: October 5, 2024
---Advertisement---

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை உடனே மீட்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தில் 2000 ஏக்கர் நிலங்களை தீட்சகர்கள் விற்று விட்டதாக இந்து சமய அறநிலைத்துறை ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன் வைத்தது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிலம் விற்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது .

இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலங்களையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பொது தீட்சகர்கள் முறையாக பராமரிக்கவில்லை என்றும் குற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலங்களை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி 12 வாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!

Bollywood actress Mallika Sherawat who claimed Tom Cruise fell in love with her.

“ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என் மீது காதலில் விழுந்தார்”: பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தின் அதிர்ச்சிப் பேச்சு!

Actress Anupama Parameswaran sharing her personal journey about surviving narcissistic abuse.

நார்சிஸ்டிக் வன்முறை, மன உளைச்சல், அடிமைத்தனம்: தனது வலிகளிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன்!

Superstar Rajinikanth's action entertainer Dharman movie production update.

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படப்பிடிப்பு தீவிரம்: இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் களமிறங்கிய ‘தி டெட்லி டாக்டர்’ ரஜினிகாந்த்!

Title teaser poster for Ashok Selvan's upcoming Tamil film 'Anbil Avan'.

அசோக் செல்வனின் அடுத்த அதிரடி ‘அன்பில் அவன்’: முதல் லுக் டீசரை வெளியிட்ட படக்குழு – செப்டம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!

Music director Sai Abhyankkar posing with his upcoming blockbuster film projects lineup.

கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் மியூசிக் டைரக்டர் சாய் அபியங்கர்: முன்னணி நடிகர்களின் பிசியான படங்களின் பிரம்மாண்ட பட்டியல்!