---Advertisement---

ஏப்ரல் 20 ஆம் தேதி யார் யாருக்கெல்லாம் அனுமதி! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்

By Sri
Published on: April 15, 2020
---Advertisement---

ஏப்ரல் 20 ஆம் தேதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படும் என மோடி அறிவித்திருந்த நிலையில் அதற்கான வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கீழ்க்காணும் தொழிற்துறைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

  1. விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பழுது நீக்கும் தொழிலகங்கள் இயங்கலாம். விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி
  2. மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை நீட்டிக்கப்படுகிறது.
  3. நகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள தொழிலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்,
  4. நூறு நாள் வேலை ஏப்ரல் 20 முதல் தொடங்கலாம். பணியாளர்கள் தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து வேலை செய்ய வேண்டும்,
  5. எலக்ட்ரீசியன், பிளம்பர், தச்சு வேலை செய்வோர் தங்கள் தொழிலுக்கு செல்லலாம்
  6. திரையரங்குகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  7. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள், ஏற்றுமதி தொடர்பான வேலைகளில் ஈடுபடலாம்.
  8. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release date announcement banner for the film Anbil Avan.

ஹேப்பி ஹை தயாரிப்பில் ‘அன்பில் அவன்’: செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் சிறப்புத் திரைப்படம்!

Actor Meesai Rajendran with Vadivelu and Vijayakanth in a file photo.

வடிவேலுவால் ஏற்பட்ட அவமானம்: விஜயகாந்த் எனக்கு ஆதரவாக நின்றார் – மீசை ராஜேந்திரன் உருக்கம்!

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!