தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களிடம் உரையாற்ற இருக்கிறார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 3550 பேர் தமிழகத்தில் எகிறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளானர். சென்னையில் மட்டும் 1724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு ஆளாகி நேற்று ஒருவர் இறந்துள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் திங்களன்று, 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சி வாயிலாக பேச இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.







