கொரொனாவால் உலகளவில் பாதிப்புகள் நேரிட்டாலும், நோய் தொற்றில் இருந்து பலரும் குணமாகியும் வருகின்றனர் என்றும் நாம் அன்றாடம் ஊடகளின் மூலம் அறிந்துகொண்டுதான் வருகின்றோம். குறிப்பாக, தமிழகத்தில் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்களும் கொரொனா தொற்றிலிருந்து மக்களை காக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி; இருவர் சென்றால் ரூ.100 அபராதம்; ஆட்சியர் காரில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்; மீறும் பட்சத்தில் ரூ.100 அபராதம்; பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.100 அபராதம்; என்று திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சியர் விஜயலெட்சுமி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார்.







