---Advertisement---

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து! மாற்று யோசனையில் ஸ்டாலின்!

By Sri
Published on: April 15, 2020
stalin
---Advertisement---

திமுக ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை காவல்துறை அனுமதி மறுப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்னை மாநகராட்சி காவல்துறை அதற்கு அனுமதி மறுத்ததால் இப்போது அந்த கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நாளை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-

ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் கொரோனா நோய்த் தொற்று குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடனும் – ஏன், மருத்துவ நிபுணர்களுடனும், மதத் தலைவர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் கொடிய கொரோனா நோய் குறித்து 15.4.2020 அன்று நடைபெறும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று காவல்துறை மூலம், அதிமுக அரசு நோட்டீஸ் கொடுக்க வைத்தது. தனிமனித இடைவெளி விட்டு, அரசின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, கூட்டம் நடத்தப்படும் என்று மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டும் – சென்னை மாநகர காவல்துறை, தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது.

கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிமுக அரசு பிடிவாதமாகச் செய்வது போல், ஜனநாயக நெறிகளுக்கு முரணான அரசியல் செய்ய, திராவிட முன்னேற்றக் கழகம் சிறிதும் விரும்பவில்லை. தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து , திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும்; 16.4.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் அன்று அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!