இந்தியாவில் நாளுக்கு நாள், கொரொனா அசுர வளர்ச்சி அடைந்து, அச்சுறுத்தலை மக்கள் மத்தியில் அடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து, அரசு சார்பாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது, இந்திய அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து, கொரொனா குறித்த தமிழகத்தின் நிலவரத்தை அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 969 லிருந்து 1075 ஆக அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும், 58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளதாகவும், 10,655 இரத்த மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு கண்காணிப்பில் 162 பேர் உள்ளதாகவும், இன்று அதிகப்பச்சமாக, திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யதுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இன்றைய தினத்தில் மட்டும், தமிழகத்தில் மொத்தமாக கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 1075 அதிகரித்துள்ளதாகவும், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள தனியார் ஆய்வு மையங்களில் கொரேனா பரிசோதனை மேற்கொண்டால் அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்துள்ளார்.







