---Advertisement---

கொரோனா பரவல்: அதிர்ச்சியளிக்கும் மகாராஷ்டிரா! இரண்டாம் இடத்தில் தமிழகம் !

By Sri
Published on: April 8, 2020
---Advertisement---

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

உலகளவில் கொரோனா தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,03,000 ஐ தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 81,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 14 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4789 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உள்ளது.

இந்நிலையில் மாநிலங்கள் வாரியாக வெளியான பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் முதல் இரண்டு இடங்களில் மகாராஷ்டிராவும், தமிழ்நாடும் உள்ளன.  தமிழகத்தில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆக இருக்க, மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் 150 புதிய நோயளிகளுடன் மொத்த எண்ணிக்கை 1164 ஆகக் கொண்டுள்ளது மகாராஷ்டிரா.

ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவும் மாநிலங்களாக மகாராஷ்டிராவும், தமிழ்நாடும் இருந்து வருகின்றன. இதில் முதலில் இரண்டாவது இடத்தில் இருந்த கேரளா தற்போது வெகுவாக எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!