மண் மணம் மாறாமல் தன்னுடைய படைப்புகளில் மண்வாசனையை தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவரின் படங்கள் அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் என்றே கூறலாம். முக்கியமாக இவரின் படங்களில் ஹீரோயின்களை கிராமத்து மேக்கப்பில் அழகாய் பிரதிபலித்திருப்பார். சிறிது காலமாக இவர் இயக்குவதை தவிர்த்து குணச்சித்திர நடிகராக களமிறங்கினார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா செய்த செயல் ஒன்று தமிழக மக்களிடையே பெரும் ஆரவாரத்தை அள்ளி தெளித்து உள்ளது. தமிழக அரசின் கொரோனா ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவை தவிர்த்து வெளியே வரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காய்கறி வியாபாரிகள் உள்ளிட்டோர் மக்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்தே பணியாற்றுகிறார்கள்.
இதனை பாராட்டும் விதமாக மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் சிலருக்கு இயக்குனர் பாரதிராஜா முககவசங்களையும், கிருமிநாசினி மற்றும் கையுறைகளை அன்பளிப்பாக அளித்துள்ளார். அது மட்டுமின்றி, மக்களுக்காக தன்னலமின்றி பணியாற்றும் அனைவரையும் மனமார உளமாற பாராட்டி உள்ளார்.







