தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தி வருகிறது.
தமிழக அரசு கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை நாளுக்குநாள் வேகத்துடன் செயல்படுத்திக் கொண்டு வருகிறது. முதற்கட்டமாக கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தும் வருகிறது.
இதற்கிடையில் சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த மாதம் மார்ச் 15ம் தேதி மக்கள் யாரேனும் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற விசாமையத்திற்கு(VISA CENTER) சென்று இருந்தால் அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது தங்களை பற்றிய விவரங்களை சென்னை மாநகராட்சிக்கு அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. அதே நாளில் விசாமையத்திற்கு(VISA CENTER) சென்ற மற்றவர்களுக்கும் இந்த செய்தியை தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.








