---Advertisement---

காய்கறி சந்தையில் புது வரவு – ஒரு கட்டு வேப்பிலை எவ்வளவு தெரியுமா?

By Sri
Published on: March 30, 2020
Neem Leaf new arrival in market
---Advertisement---

இந்தியாவில் கொரோனா காரணமாக மக்கள் பெரும் கவலையாகவும் அதேசமயம் தங்களின் முன்னோர்கள் கூறிய பழவழக்கங்களை ஒரு சிலர் குறிப்பாக கிராமங்களில் கடைபிடிக்க தொடங்கிவிட்டனர். கொரோனாவிற்கு என எந்த மருந்தும், தடுப்பூசியும் அதிகாரப்பூர்வமாக அரசு இன்னும் வெளியிடவில்லை. அதற்கான ஆராய்ச்சிகளை உலகளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போதைக்கு மருத்துவர்கள் கொரோனாவிற்குறிய வரையறுக்கப்பட்ட மருத்துவ நடைமுறையை பின்பற்றி வருகின்றனர் என்று கூறப்படுகின்றது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வீட்டு வைத்தியங்களுக்கும், நாட்டுமருத்துவத்திற்கும் இன்னளவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் வீட்டில் கொரோனாவை அண்ட விடக்கூடாது என்ற தீர்மானத்தில் தங்களின் வீட்டை மட்டும் அல்லாமல் தங்கள் உயிரையும், ஊரையும் பாதுகாக்க வேப்பிலையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதன்படி காலை மாலை என்ற இரண்டு வேலையிலும் மஞ்சள் நீரை வாசல் தெளித்து, வேப்ப இலைகளை தூவியும், இன்னும் ஒரு சிலர் மாட்டு சாணத்தை கரைத்து தெளித்து அதன் பின் மஞ்சள் நீரை தெளித்து கோலமிட்டு வேப்ப இலைகளை தூவி வேப்பெண்ணெய் கலந்த எண்ணெயில் தீபம் ஏற்றியும் வருகின்றனர்.

கிராமப்புறங்களில் வேப்பிலை சுலபமாக கிடைக்கும். ஆனால் பெருநகரங்களில் வேப்பிலை கிடைப்பது என்பது அரிதானது. அதனால் காய்கறி பழங்களை தொடர்ந்து நகர்ப்புறங்களில் வேப்பிலையும் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கட்டு வேப்பிலை சராசரியாக 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்குள் விற்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாது இன்னும் சில நகரங்களில் வேப்பிலை கிடைப்பதில் பெரும் கிராக்கிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க