தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா எதுவும் சென்றுவிடாதீர்கள் என எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விமான நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லாவற்றையும் மூட அரசுகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு மார்ச் 31 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சில தனியார் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ள்ளன.
இந்நிலையில் மக்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் குடும்பத்தோடு சுற்றுலா எதுவும் சென்றுவிட வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே போல சுற்றுலா விடுதிகளையும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடவேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு எதையும் மார்ச் 31 வரை செய்யக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







