---Advertisement---

காசு கொடுத்தால் அரைகுறை உடையுடன் நடனம் – டிக்டாக் பிரபலத்தின் பெயரால் மோசடி !

By Sri
Published on: March 16, 2020
---Advertisement---

டிக்டாக்கில் தனது கவர்ச்சி நடனத்தின் மூலம் பிரபலமாக இருக்கும் இலக்கியா என்பவரின் பெயரில் பணமோசடி நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டிக்டாக்கில் கவர்ச்சியாக பல பாடல்களுக்கு நடனமாடி பிரபலமானவர் இலக்கியா என்ற பெயரில் இருக்கும் பெண். இவரது நடனத்துக்கு டிக்டாக்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் போட்டால் இரவில் தனியாக அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடப்படும் வீடியோ அனுப்பப்படும் என அவரது பெயரில் இருந்த கணக்கில் அறிவிக்கபப்ட்டுள்ளது.

இதைப் பார்த்த பல ஜொள்ளி ஆசாமிகளும் பேர்வழிகளும் அந்த வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு வீடியோவுக்காக காத்திருந்துள்ளனர். ஆனால் சொன்னது போல வீடியோ எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த நபர்கள் இதுபற்றி இலக்கியாவிடம் கேட்க, அவரோ ’அது என்னுடைய அக்கவுண்ட் இல்லை… என் பெயரில் யாரோ மோசடி செய்துள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான அந்த நபர்கள் தங்கள் பணம் போச்சே என சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.