தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரக் கூட்டணியான பிரபுதேவா மற்றும் சிம்ரன் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘கமல் ஸ்ரீதேவி’ (Kamal Sridevi). அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்கும் இந்த ரொமான்ஸ் என்டர்டெய்னர் படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியான பிஹைண்ட் த சீன்ஸ் (Behind The Scenes) அப்டேட் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக 90-களின் இறுதியில் வெளியான பல வெற்றிப் படங்களில் பிரபுதேவா மற்றும் சிம்ரன் ஜோடியின் நடனமும் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாகத் திரையில் தோன்றவுள்ளது ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.
View this post on Instagram
இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் ஸ்மேகா மணிமேகலை ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பாசிலியன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்து பகிரப்பட்டுள்ள சுவாரசியமான காட்சிகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘கமல் ஸ்ரீதேவி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.













