‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் மீண்டும் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள புதிய மலையாளத் திரைப்படம் ‘ஹலோ டியர்’ (Hello Dear). இந்த ரொமான்டிக் காமெடித் திரைப்படத்தின் அழகான புதிய போஸ்டரைப் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அத்துடன், இப்படம் வருகிற 2027-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயாரிப்புத் தரப்பு உறுதி செய்துள்ளது.
‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குக் கதை எழுதி நடித்த பிரபல எழுத்தாளர் டினோய் பவுலோஸ் (Dinoy Paulose), இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆஷிக் உஸ்மான் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் இடையேயான கலகலப்பான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
குறிப்பாக, மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் மற்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஆகிய மூவருக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இதன் காரணமாக, மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஹலோ டியர்’ திரைப்படத்தைத் தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியிடப் படக்குழுவினர் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகத் திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. தமிழ் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவிடமிருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













