இயக்குநர் ராஜ்குமார் பெிரியாசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘OM’ திரைப்படம் குறித்த புதிய மற்றும் சுவாரசியமான தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளன. இப்படத்தின் மொத்த இறுதி நேர அளவு அதாவது ரன்டைம் 2 மணி 40 நிமிடங்கள் (160 நிமிடங்கள்) எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதைக்களம் குறித்த முக்கிய விவரங்களும் கசிந்துள்ளன. இதன்படி, இப்படம் செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கதையின்படி, மொத்தம் 1000 டன் செம்மரம் கடத்தப்பட உள்ள நிலையில், அதில் 300 டன் வெற்றிகரமாகக் கடத்தப்பட்டுவிடுகிறது. மீதமுள்ள 700 டன் மரங்களைக் கடத்துவதில் பெரிய சிக்கல் ஏற்படுவதும், அதனைத் தடுக்க நாயகன் எடுக்கும் முயற்சிகளுமே படத்தின் முக்கிய கதைக்களமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் கதாபாத்திரங்களின் அமைப்பும் மிகவும் மிரட்டலாக இருப்பதாகத் தெரிகிறது. நடிகர் தனுஷ் ஒரு இரகசிய உளவுத்துறை அதிகாரியாகவும் (அண்டர்கவர் ஸ்பை), நடிகை சாய் பல்லவி துணிச்சலான காவல்துறை அதிகாரியாகவும் இப்படத்தில் களமிறங்குகிறார்கள். இவர்களுக்கு எதிராக மெகாஸ்டார் மம்மூட்டி இப்படத்தின் முக்கிய வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி மற்றும் திருப்பங்கள் நிறைந்த கதைக்களம் சினிமா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.













