---Advertisement---

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Published on: August 8, 2026
Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.
---Advertisement---

தமிழ் திரையுலகின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘ஹாய்’ (Hi) திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முன்னாள் உதவியாளரான விஷ்ணு எடவன் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், இப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், திரையரங்குகளில் நிலவும் சூழல் மற்றும் பிற படங்களின் மோதலைத் தவிர்க்கும் வகையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதனை அறிவிக்கும் விதமாக படக்குழு வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கவின் தன் பட அறிவிப்பு குறித்துப் பேசுகையில், “பேச்சு ரெடி, முக்கியமா பேச்சு ஃபயரா இருக்கணும்” என்று உற்சாகமாகக் கூற, அதற்கு நயன்தாரா கலாய்க்கும் விதமாக, “உங்க பேச்சு ஃபயரா இருக்குமா, ஸ்டேட்டெல்லாம் அதிருமா? நம்ம எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி” என்று கலகலப்பாகப் பேசுகிறார். ஜீ ஸ்டுடியோஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் (Rowdy Pictures) இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!

Box office collection report for GDN and DC opening day.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: வசூலில் பின் தங்கிய மாதவனின் ‘ஜிடிஎன்’ மற்றும் நல்ல தொடக்கத்தைப் பெற்ற ‘டிசி’!