---Advertisement---

Jananayagan Piracy : “சிக்கியது 6 பேர் கும்பல்” – விஜய் பட லீக் விவகாரத்தில் சைபர் கிரைம் அதிரடி வேட்டை; 300 லிங்க்குகள் பிளாக்!

By Sri
Published on: April 13, 2026
A digital warning graphic overlaying the Jananayagan movie poster highlighting the consequences of film piracy.
---Advertisement---

தமிழக திரையுலகையே அதிரவைத்த ‘ஜனநாயகன்’ (Jananayagan) பட லீக் விவகாரத்துல இப்போ ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுருக்கு. தளபதி விஜய் நடிச்சுருக்குற இந்தப் படம் இணையத்துல கசிஞ்ச உடனே, தமிழக சைபர் கிரைம் போலீஸார் களத்துல இறங்கி தீவிரமா விசாரணை பண்ணிட்டு இருந்தாங்க. அதோட பலனா இப்போ இந்தப் படத்தோட லீக்குக்கு காரணமா இருந்த 6 பேரை போலீஸார் அதிரடியா கைது பண்ணிருக்காங்க.

சைபர் கிரைம் போலீஸார் இப்போ வரைக்கும் 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோத லிங்க்குகளை கண்டுபிடிச்சு அதை மொத்தமா பிளாக் பண்ணிருக்காங்க. இந்தப் படத்தோட ஹெச்டி (HD) பிரிண்ட் இணையத்துல பரவுனதுமே தயாரிப்பு நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுருக்கு. கைது செய்யப்பட்ட 6 பேர் மேலயும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act), காப்புரிமை சட்டம் (Copyright Act) மற்றும் பிஎன்எஸ் (BNS) ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ வழக்கு பதிவு செய்யப்பட்டுருக்கு.

கைது செய்யப்பட்டவங்க கிட்ட இப்போ தீவிரமா விசாரணை நடந்துட்டு வருது. இவங்களுக்கு பின்னாடி ஏதாச்சும் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கான்னு போலீஸார் செக் பண்ணிட்டு இருக்காங்க. ‘ஜனநாயகன்’ படம் இன்னும் தியேட்டருக்கே வராத நிலைமையில, இது மாதிரி லீக் ஆகுறது தயாரிப்பாளருக்கு கோடி கணக்குல நஷ்டத்தை ஏற்படுத்தும்னு போலீஸார் எச்சரிக்கை குடுத்துருக்காங்க. அதுமட்டும் இல்லாம, யாராச்சும் இந்த லிங்க்குகளை வாட்ஸ்அப் அல்லது மத்த சோசியல் மீடியாவுல ஷேர் பண்ணா அவங்க மேலயும் ஆக்ஷன் எடுக்கப்படும்னு சொல்லிருக்காங்க.

Tamil Nadu Cyber Crime officials addressing the press about the arrest of six accused in Jananayagan movie piracy case.
‘ஜனநாயகன்’ பட லீக் விவகாரத்தில் 6 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்.

சினிமாத்துறைக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலா இருக்குற இந்த நேரத்துல, ரசிகர்கள் எல்லாருமே லீக் ஆன வீடியோவை பாக்காம தியேட்டர்ல வந்து பாக்கணும்னு விஜய் ரசிகர்கள் இப்போ பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஏற்கனவே சூர்யாவோட ‘கருப்பு’ படம் ரிலீஸ்க்கு ரெடி ஆகிட்டு இருக்குற நேரத்துல, விஜய்யோட படத்துக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தது கோலிவுட் வட்டாரத்துல பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திடுச்சு. ஆனா போலீஸாரோட இந்த அதிரடி கைது படக்குழுவுக்கு ஒரு சின்ன நிம்மதியை குடுத்துருக்கு.

விஜய் இப்போ அரசியல்ல களமிறங்குறதுனால அவரோட கடைசி படமான ‘ஜனநாயகன்’ மேல ஒரு பெரிய பொலிட்டிக்கல் ஹைப் இருக்கு. அதை கெடுக்கணும்ன்ற எண்ணத்துல ஏதாச்சும் சதி நடந்துருக்கான்ற கோணத்துலயும் விசாரணை போயிட்டு இருக்கு. எது எப்படியோ, போலீஸாரோட இந்த ‘சைபர் வேட்டை’ மத்த திருட்டு இணையதளங்களுக்கும் ஒரு பெரிய எச்சரிக்கையா அமைஞ்சுருக்கு. படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள எல்லா லிங்க்குகளையும் முடக்கிடுவோம்னு போலீஸார் உறுதியா சொல்லிருக்காங்க.

விஜய் பட லீக் விவகாரத்துல போலீஸார் எடுத்துருக்குற இந்த மின்னல் வேக நடவடிக்கை சினிமா உலகத்தை ஆச்சரியப்பட வெச்சுருக்கு. திருட்டுத்தனமா படம் பார்க்குறது ஒரு குற்றம்.. அதை செய்யாதீங்கன்னு போலீஸார் மக்கள்கிட்ட கோரிக்கை வெச்சுருக்காங்க.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!