---Advertisement---

Jana Nayagan Case : எடிட்டிங் ரூமில் இருந்து திருடப்பட்ட ரீல்கள்; லீக் செய்த மெயின் குற்றவாளி அதிரடி கைது!

By Sri
Published on: April 16, 2026
Actor Thalapathy Vijay's Jana Nayagan movie poster alongside cyber crime police warning against piracy.
---Advertisement---

தமிழ் திரையுலகையே உலுக்கிய தளபதி விஜய்யின் ஜன நாயகன் (Jana Nayagan) பட லீக் விவகாரத்துல இப்போ ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுருக்கு. கடந்த ஏப்ரல் 10-ம் தேதி இந்தப் படம் முழுமையா இணையதளத்துல லீக் ஆகி ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியைக் குடுத்துச்சு. இது சம்பந்தமா சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திட்டு வந்த நிலையில, இப்போ அந்தப் படத்தை லீக் பண்ண முக்கிய குற்றவாளியை (Main Culprit) அதிரடியா கைது செஞ்சிருக்காங்க.

விசாரணையில வெளிவந்த தகவல்கள் எல்லாரையும் அதிர்ச்சியடைய வெச்சுருக்கு. படத்தோட எடிட்டிங் வேலைகளுக்காக நியமிக்கப்பட்ட ஒரு ஃப்ரீலான்ஸர் (Freelancer) தான் இந்த வேலையைச் செஞ்சிருக்காரு. எடிட்டிங் ரூம்ல யாருக்கும் தெரியாம, அனுமதியே இல்லாம படத்தோட காட்சிகளை (Reels) காப்பி செஞ்சு தன்னோட நண்பர்களுக்குப் பகிர்ந்திருக்காரு. அவங்க மூலமா தான் படம் இணையதளத்துல கசிஞ்சிருக்குன்றது இப்போ ஊர்ஜிதமாகியிருக்கு.

தன்னோட கைவரிசையை காட்டிய அந்த ஃப்ரீலான்ஸர் உட்பட இப்போ மேலும் 3 பேரை போலீஸார் கைது பண்ணிருக்காங்க.

ஏற்கனவே இந்த வழக்குல 6 பேர் கைதாகி இருந்த நிலையில, இப்போ மொத்தமா கைதானவங்களோட எண்ணிக்கை 9-ஆக உயர்ந்திருக்கு. ஒரு பெரிய ஹீரோவோட கடைசி படத்தை, அதுவும் ரிலீஸ்க்கு முன்னாடியே இப்படி ஒரு எடிட்டிங் டீம்ல இருந்தவரே லீக் பண்ணது சினிமா வட்டாரத்துல ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பிருக்கு. இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட சமீபத்துல “இயக்குனர்களுக்கு இது மரணத்தை விட பெரிய வலி”ன்னு இதைப் பத்தி எமோஷனலா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மலேசிய பெண் பார்த்த மாஸ்டர் படம்- ஆதரவும் எதிர்ப்பும்

2026 ஏப்ரல் 16-ம் தேதியான இன்னைக்கு இந்த அதிரடி கைதின் மூலம் ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் போலீஸார் முடக்கிட்டு வர்றாங்க. வரும் மே மாதம் 14-ம் தேதி படம் பிரம்மாண்டமா ரிலீஸ் ஆகப்போகுது. படம் ஆன்லைன்ல லீக் ஆனாலும், தளபதி விஜய்யோட அந்த கடைசி மேஜிக்கை தியேட்டர்ல தான் பார்க்கணும்னு ரசிகர்கள் இப்போவே டிக்கெட் புக்கிங்கிற்காக ஆர்வமா காத்துட்டு இருக்காங்க. அதே சமயம், இனிமே வர்ற பெரிய படங்கள்ல எடிட்டிங் ரூம் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்படும்னு எதிர்பார்க்கப்படுது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?