---Advertisement---

Youth Producer Mega Gift : லாபத்தில் பங்கு – கென்னுக்கு தயாரிப்பாளர் கொடுத்த தரமான சம்பவம்!

By Sri
Published on: April 2, 2026
---Advertisement---

தமிழ் சினிமாவில் சமீபத்தில் ரிலீஸாகி செம ஹிட் அடித்துள்ள படம் ‘யூத்’. கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள இந்த படம் ஸ்கூல் லைஃப் மற்றும் எமோஷனல் கதையை மையமாக வைத்து 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் செய்த ஒரு விஷயம் தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

பொதுவாக ஒரு படம் ஹிட்டானால் தயாரிப்பாளர் இயக்குனருக்கு கார் அல்லது வாட்ச் பரிசாக கொடுப்பது தான் வழக்கம். ஆனால், இந்த ‘யூத்’ தயாரிப்பாளர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து கென் கருணாஸை பார்ட்னராகவே மாற்றிவிட்டார். படம் ஆரம்பிக்கும் போதே கென்னுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத பங்கை கொடுத்து, அவரை தயாரிப்பாளராகவும் மாற்றியுள்ளார்.

Producer Karuppiah C Ram and Director Ken Karunaas at Youth movie success meet event

இயக்குனர்கள் தான் ஒரு படத்தின் முதுகெலும்பு என்றும், அவர்களுக்கு படத்தின் மீது ஒரு உரிமை இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்ததாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இது வெறும் ஆரம்பம் தான் என்றும், இனி தனது தயாரிப்பில் உருவாகும் அனைத்து படங்களிலும் அந்தந்த இயக்குனர்களுக்கு லாபத்தில் பங்கு வழங்கப்படும் என்றும் அவர் ஓப்பனாக பேசியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  15 ஆண்டுகளுக்குப் பிறகு இதை இப்போதுதான் குடிக்கிறேன்! ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட தகவல்!

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்… இயக்குனர்கள் வெறும் சம்பளத்திற்காக மட்டும் வேலை செய்யாமல், படத்தின் வெற்றிக்கு அவர்களும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே தயாரிப்பாளரின் நோக்கம். 27 வயதே ஆன இளம் தயாரிப்பாளர் கருப்பையாவின் இந்த பெருந்தன்மையான செயல் மற்ற தயாரிப்பாளர்களையும் வியக்க வைத்துள்ளது. கென் கருணாஸின் உழைப்பிற்கு கிடைத்த இந்த அங்கீகாரம் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?