---Advertisement---

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

By Sri
Published on: October 9, 2024
---Advertisement---

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது.

பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரில் பள்ளி கல்வி திட்டத்தின் வாயிலாக வழங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு கட்டங்களாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதாவது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த நிதி செலவு செய்யப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் முன்மொழியப்படும் மொத்த நிதியில் மத்திய அரசு சார்பில் 60% மாநில அரசு சார்பில், 40 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் மத்திய அரசு 2,152 கோடியை தன் பங்கு நிதியாக வழங்குவதற்கு முன்மொழிந்து இருந்தது. அதில் முதல் கட்ட நிதியாக 573 கோடியை கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் தற்போது வரை முதல் கட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசின் பி எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு இணைவதற்கு ஒப்புக் கொள்ளாத காரணத்தால் அந்த நிதியை நிறுத்தி வைப்பதாக கூறியிருந்தது. பி எம் ஸ்ரீ திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள மும்மொழி கல்வி கொள்கை இருப்பதால் அதை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. ‘2024 25 ஆம் ஆண்டுக்கான சமக்ர சிக்ஷா அபியான் நிதியை வழங்க சில நிர்வாக அனுமதி பெற வேண்டி உள்ளது. அந்த நிர்வாக செயல்முறைகள் முடிந்ததும் எப்போது நிதி ஒதுக்கப்படும் என்கின்ற விவரம் தெரிவிக்கப்படும்’ என மத்திய அரசு சார்பாக விளக்கம் கொடுத்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!