வங்காள தேசத்தின் பிரபலமான நடிகை ரைமா இஸ்லாம் சிமு. இவர் சில நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்தார். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தது.
அங்குள்ள காலாபகன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து நடிகையை தேடி வந்த போலீசார் டாக்காவில் உள்ள புறநகர் ஒன்றில் சாக்கு மூட்டையில் கட்டி இருந்த நடிகையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பபட்டுள்ளது.
இந்நிலையில் குடும்ப பிரச்சினையில் அவரது கணவரே நடிகையை கொலை செய்தது தெரிய வந்தது.













