திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு எஸ்.எஸ் ஐயாக இருந்தவர் பூமிநாதன். இவர் நேற்று ஆடு திருடர்களை பிடிக்க சென்றபோது ஆடு திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இன்று தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி முதல் முதலமைச்சர் ஸ்டாலின் வரை இப்பிரச்சினைக்கு தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய இரண்டு டி.எஸ்.பிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை எஸ்.எஸ் ஐ பூமிநாதனின் உடல் 30 குண்டுகள் முழங்க காவல் துறையின் மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.













