தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் கொடிய நச்சுக்கள் வெளியேறி கேன்சர் போன்ற கடும் நோய்கள் ஏற்படுகிறது என நீண்ட நாட்கள் கடும் போராட்டங்கள் நடந்து வந்தன.
கடந்த 2019ல் இதை எதிர்த்து நடந்த பெருங்கலவரத்தாலும் அதன் பின் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டாலும் 13 பேர் உயிரிழந்தனர்.
இதனால் மக்களின் விருப்பப்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நாங்கள் ஆக்சிஜனாவது உற்பத்தி செய்து தருகிறோம் எங்களை மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதியுங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விசயத்திற்கு மத்திய அரசும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் நாளை மனு விசாரணைக்கு வருகிறது













