மிஸ் யூனிவர்ஸ் இந்தியா என்ற பட்டத்தை 19 வயதான ரியா சிங்கா வென்றிருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதிப்போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் முன்னாள் மிஸ் யூனிவர்சும் நடிகை மான ஊர்வசி ரவுத்தாலா நடுவராக பங்கேற்று இருந்தார். இந்த போட்டியில் பலர் தகுதி பெற்றிருந்த நிலையில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 19 வயதான ரியா சிங்கா தட்டி சென்றார்.
அவருக்கு ஊர்வசி கிரீடத்தை சூட்டினார். இதையடுத்து ரியா சிங்காவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்த பெரிய வெற்றிக்கு பிறகு ரியா தன் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசிய ரியா இன்று நான் மிஸ் யூனிவர்சீஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளேன். நான் மிகவும் நன்றியுள்ளவளாக உணர்கிறேன்.
இந்த கிரீடத்திற்கு நான் தகுதியானவள் என்று கருதும் அளவிற்கு இந்த நிலைக்கு வருவதற்கு நான் நிறைய வேலை செய்திருக்கின்றேன். முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து நடிகையும் முன்னாள் மிஸ் யூனிவர் ஊர்வசி ரவுத்தாலா கூறியதாவது இந்த ஆண்டு கிரீடத்தை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.













