தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) எந்தளவிற்குப் புகழின் உச்சியில் இருந்தாலும், எப்போதுமே தனது எளிமையான குணம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில், தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ (Jailer 2) படத்தின் புரோமோஷன் நிகழ்வில் அவர் பகிர்ந்து கொண்ட சில சுவாரஸ்யமான மற்றும் நெகிழ்ச்சியான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உடனான உரையாடலின் போது, “எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் மிக ஆழமான பதிலைக் அளித்துள்ளார். இது குறித்துப் பட விழாவில் அவர் பேசுகையில், “நான் நடிகர் என்பதை விரும்புகிறேன். ஆனால், அதைவிடப் பேருந்து நடத்துநர் வேலையை அதிகம் விரும்புகிறேன். அந்த ஐந்தாண்டு பணி அனுபவத்தை இப்போதும் மிஸ் செய்கிறேன். நான் ஒரு நடிகர், ஸ்டார் என்பதெல்லாம் இருந்தாலும், முதலில் நான் ஒரு நடத்துநர் என்பது எனக்குள் ஆழமாக ஊறிவிட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த அவர், “எனவே ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் என்பதெல்லாம் என்னோடு பொருத்திக் கொள்ளவே முடியவில்லை. இப்போதும் என்னை ஒரு பேருந்து நடத்துநராகவே நினைத்துக் கொள்கிறேன். ஒரு பேருந்து நடத்துநர் உங்களைப் போன்ற பெரிய மனிதர்களிடம் தன்மையாகத்தானே நடந்து கொள்வார்” என்று அவர் மிகவும் எளிமையாகக் குறிப்பிட்டார். திரையுலகில் இவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தும் தனது கடந்த காலத்தை மறக்காமல் அவர் பகிர்ந்துகொண்ட இந்த வார்த்தைகள் அரங்கத்த and ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.













