தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாக நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருது (International Emmy Awards) விழாவில் கலந்துகொண்டு விருது வழங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.
‘மகாராஜா’ திரைப்படத்தின் உலகளாவிய வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ள விஜய் சேதுபதி, இந்தப் பெருமைமிகு விழாவில் இந்திய சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்றார். உலகத் தரத்திலான கலைஞர்கள் கூடியிருந்த அந்த மேடையில் அவர் விருது வழங்கியது தமிழ் ரசிகர்களுக்கும் இந்தியத் திரையுலகினருக்கும் பெருமிதத்தை அளித்துள்ளது.
விழாவின் சிவப்புக் கம்பளத்தில் (Red Carpet) விஜய் சேதுபதி தோன்றிய விதமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கிளாசிக் பிளாக் சூட், பளபளக்கும் கருப்பு ஷூக்கள் மற்றும் நேர்த்தியான சைடு-பார்ட்டட் ஹேர்ஸ்டைல் என மிகவும் ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் அவர் காட்சியளித்தார்.
இந்திய சினிமாவை உலக மேடையில் கௌரவப்படுத்தியதோடு, தனது தனித்துவமான ஃபேஷன் தோற்றத்தாலும் நியூயார்க் விழாவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.













