---Advertisement---

ஊரடங்கை மீறியதால் பைக்கை பிடுங்கிய போலீஸார்! தீக்குளித்த இளைஞர்!

By Sri
Published on: April 21, 2020
---Advertisement---

ஊரடங்கை மீறி பைக்கில் சுற்றியதால் இளைஞன் ஒருவரின் பைக்கை போலிஸார் பிடுங்க அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை கடந்த சில நாட்களாக போலீசார் கடுமையாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் இடுக்கியில் ஊரடங்குப் பணியில் போலிஸார் ஈடுபட்டு இருந்த போது விஜயகுமார் என்ற 24 வயது இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் அத்தியாவசிய தேவைகளுக்காக வரவில்லை என்பதைப் போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவர் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீயைப் பற்ற வைத்துள்ளார். இதனைப் பார்த்த மக்கள் தண்ணீர் ஊற்றி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரது உடலில் 75 சதவீதம் தீக்காயம் இருந்ததால் பரிதாபமாக பலியானார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sibi Sathyaraj riding a retro-style bike with a 'TVK 2026' number plate.

ரெட்ரோ ஸ்டைல் போட்டோவால் வைரலாகும் சிபி சத்யராஜ்: பைக் நம்பர் பிளேட்டில் ‘TVK 2026’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Official promotional poster for the romantic comedy Sandakkari.

நீண்ட காத்திருப்புக்குப் பின் ‘சண்டக்காரி’: விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வரும் ரொமான்டிக் காமெடி படம்!

Official theatrical release promotional banner for the sea sports thriller Mandaadi.

நாளை முதல் திரையரங்குகளில் ‘மண்டாடி’: சூரி நடிப்பில் உருவாகியுள்ள கடல் சாகச த்ரில்லர் படம் ரிலீஸ்!

Official first look poster of Drones launched by director AR Murugadoss.

ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘டிரோன்ஸ்’: வினோத ஜானரில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Promotional design celebrating the massive box office success of Hanuman Ansh.

ரூ.2 கோடி பட்ஜெட்… ரூ.170 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’!

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!