Latest News
உலகிலேயே அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர்… மாரடைப்பால் உயிரிழந்த சோகம்…!
உலகிலேயே அசுரத்தனமான உடல்வாகக் கொண்டிருக்கும் பாடிபில்டர் 36 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
பெலாரஸ் நாட்டை சேர்ந்த இலியா யெஃபிம்சிக் என்ற நபர் சிறந்த பாடி பில்டராக இருந்து வருகின்றார். இவருக்கு 36 வயதாகின்றது. தனது தீவிர உடற்பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடி பில்டர் என்று அழைக்கப்பட்டார். இவர் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்தபோது இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரின் மனைவி ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்துள்ளார். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் கோமா நிலைக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரின் மனைவி அன்னா கூறுகையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் மார்பில் கையை வைத்து நன்றாக அழுத்தி முதலுதவி செய்தேன். ஆம்புலன்ஸ் வரும்வரை அவ்வாறு செய்தேன். இலியா உடல் நலம் பெற வேண்டும் என்று எல்லா நேரத்திலும் பிரார்த்தனை செய்தேன். எல்லா நாட்களும் செலவழித்தேன். 2 நாட்களுக்கு அவருடைய இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது.
ஆனால் அவருடைய மூளை செயலிழந்ததாக மருத்துவர்கள் பயங்கரமான செய்தியை என்னிடம் கூறினார்கள். இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பலர் எனக்கு உதவியும் ஆதரவும் வழங்க தயாராக உள்ளனர். நான் இந்த உலகத்தில் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்வது மனதுக்கு இத்தக்கமாக இருக்கின்றது’ என்று தெரிவித்தார். ராட்சச உடல்வாகக் கொண்டவராக இருந்தாலும் இவர் இதுவரை எந்த ஒரு தொழில்முறை போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுக்காக வீடியோக்களை பகிர்ந்து வருவார்.