---Advertisement---

Vijay’s Secret Call – அனில் ரவிபுடியை வியக்க வைத்த தளபதி விஜய்யின் போன் கால்!

By Sri
Published on: July 22, 2026
Promotional concept visual representing director Anil Ravipudi meeting actor Thalapathy Vijay.
---Advertisement---

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் அனில் ரவிபுடி, நடிகர் தளபதி விஜய்யைச் சந்தித்த மறக்க முடியாத தருணம் குறித்து மனம் திறந்துள்ளார். நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். இப்படத்தைப் பார்த்த நடிகர் விஜய், ஹைதராபாத்தில் ‘தி கோட்’ (The GOAT) படப்பிடிப்பில் இருந்தபோது அனில் ரவிபுடியை நேரில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தத் திடீர் அழைப்பு குறித்து அனில் ரவிபுடி கூறுகையில், “விஜய் சார் என்னை நேரில் அழைக்கவும் ஆச்சரியப்பட்டு உடனடியாக அங்கே ஓடினேன். அவரது காரவானில் அவருடன் 15 நிமிடங்கள் செலவழித்தேன். ‘பகவந்த் கேசரி பார்த்தேன், ரொம்ப பிடித்திருந்தது. மிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். சில எபிசோடுகள் இன்னும் என்னை haunt செய்கிறது. அதனால்தான் உங்களைப் பாராட்டுவதற்காக அழைத்தேன்’ என்று விஜய் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார். அந்தச் சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும், உடனடியாக மகேஷ் பாபுவை அழைத்து இதைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் தற்போது வைரலாகி வரும் இந்தத் தகவல், சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் சக இயக்குநர்களின் பணிகளை வெளிப்படையாகப் பாராட்டி ஊக்கப்படுத்துவது திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Social media report regarding the wedding rumors of music composer Anirudh and Kavya Maran.

நவம்பர் 10-ல் கிரீஸில் பிரம்மாண்ட டெஸ்டினேஷன் வெட்டிங்? வைரலாகும் செம ஹாட்டான வைரல் செய்தி!

Box office collection report graphic for Suriya's Vishwanath And Sons.

111 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மற்றும் ஏரியா வாரியான வசூல் முழு விவரம்!

Music composer Sai Abhyankkar expressing his thoughts on missing a project with Thalapathy Vijay.

“என்னை சென்டிமென்ட் ஆக்கிடாதீங்க”: தளபதி விஜய்யுடன் பணிபுரியும் வாய்ப்பை இழந்தது குறித்து மனம் திறந்த இசையமைப்பாளர் சாய் அபியங்கர்!

ஓணம் 2026 மலையாளத் திரைப்படங்களின் வெளியீட்டுப் பட்டியல் போஸ்டர்.

ஓணம் ரேஸில் இணையும் பான் – இந்தியா மெகா படங்கள்: யஷின் ‘டாக்சிக்’ முதல் பிருத்விராஜ், நிவின் பாலி வரை – இந்த ஆண்டின் அதகளம் ஓணம் ரிலீஸ் முழு பட்டியல் மற்றும் நடிகர் பட்டாளம்!

Director Lokesh Kanagaraj speaking openly about internet trolls regarding his films Leo and Coolie.

“என் தாயே எனக்கு அந்தட்ரோல்களை அனுப்புகிறார்”: நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

News report regarding the high-security shooting location of Superstar Rajinikanth's Dharman.

பொறியியல் கல்லூரியில் மருத்துவமனை செட்: ‘தர்மன்’ படப்பிடிப்பில் ரகசியத்தைப் பாதுகாக்கும் அஸ்வத் மாரிமுத்து!