Latest News
மீன்களையே உடையாக…. நடுரோட்டில் பேஷன் ஷோ நடத்திய பெண்… வைரலாகும் வீடியோ…!
மீன்களை உடையாக உடுத்தி நடுரோட்டில் பேஷன் ஷோ நடத்திக்காட்டிய பெண்ணின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பேஷன் ஷோக்கலில் விதவிதமான உடைகளை அறிமுகம் செய்வார்கள். தங்களின் கற்பனைக்கு ஏற்ப உடைகளை பலரும் தங்கள் கைகளாலேயே செய்து அதனை மாடல் அழகிகளில் போட வைத்த ரேம் வாக் செய்து தங்களின் கைத்திறன்களை வெளி கட்டுவார்கள். ஆனால் தற்போது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான ஆடைகளை உடுத்தி போட்டோ சூட் எடுத்து அதனை வெளியிட்டு வைரலாகி வருகின்றனர்.
அதிலும் வித்தியாசமான உடைகளுக்கு லைக்குகள் அள்ளி விடுகின்றது. அப்படி ஒரு மாடலிங் பெண் செய்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மீன்களை உடையாக்கி சமூக வலைதள பக்கத்தில் அனைவரையும் பார்வையையும் பெற்றிருக்கின்றது. அவர் நூற்றுக்கணக்கான மீன்களை நூலில் கோர்த்து உடையாக அணிந்து இருக்கின்றார்.
அதை அணிந்து கொண்டு பேஷன் ஷோ மேடைக்கு பதிலாக நடுரோட்டில் ராம்ப் வாக் செய்த வீடியோ வைரலாகி வருகின்றது. மீன்களை நெக்லஸ் போலவும் அணிந்து இருக்கின்றார். மேலும் ஒரு பெரிய மீனை நன்றாக வாயை திறக்க வைத்து கைப்பைப் போல மாற்றி அதனை எடுத்து வரும் வீடியோ வைரலாகி வருகின்றது. சமூக வலைதள பக்கங்களில் இந்த வீடியோவானது 51 லட்சம் பெயரால் ரசிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் பலரும் இந்த வீடியோவுக்கு தங்களது லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram