---Advertisement---

அடுத்த மாதம் வரை பெய்ய போகுதாமே மழை?…வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்…

Published on: June 27, 2024
Rain
---Advertisement---

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக. அதிக வெப்பத்தால் வாடி வந்தவர்களை இந்த திடீர் மழை மகிழ்ச்சியடையச்செய்துள்ளது.

ஒரு சில இடங்களில் பெய்த கனமழையின் காரணாமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையில் தேங்கி நின்ற தண்ணீரின் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.

இந்நிலையில் இப்போது பெய்து வரும் மழை அடுத்த மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Rain Fall
Rain Fall

மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவதாக சொல்லியிருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை இந்த மழை நீடிக்கும் என்றிருக்கிறது.

நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும். தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையான மழை இரவு நேரங்களில் பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியே இருக்கும். ஒரு சில இடங்களில் மட்டும் இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி வரை வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.