---Advertisement---

கள்ளச்சாராய பலி விவகாரம்…தமிழக அரசுக்கு விஜய் கடும் கண்டனம்…

Published on: June 20, 2024
stalin vijay
---Advertisement---

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 25க்குமேற்பட்டோர் பலியாகினர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பலரும் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடந்து அவர்களுக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த துயர சம்பவத்தை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார். மதுவிலக்கு துறை, காவல் துறை அதிகாரிகள் பலரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது போல சம்பவத்தில் ஈடுபடுவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் திரைப்பட நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக இந்த கள்ளசாராய பலி சம்பவம் இருப்பதாக சொன்னார்.

இந்த துயர சம்பத்தில் பலியானோர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை சொல்லியிருக்கிறார். சிகிட்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுவதாக கூறியிருக்கிறார்.

stop liquor
stop liquor

அரசு நிர்வகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தீவிர அரசியலில் விஜய் ஈடுபடப்போவதாக விஜய் சொல்லியிருந்த நிலையில் தமிழக அரசுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் விஜய்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரனை அதிகாரியாக கோதி நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்ற கூட்ட தொடர் இன்று தொடங்கிருக்கும் நிலையில், முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

இந்த துயர சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!