---Advertisement---

நித்யானந்தாவின் ஆன்மீக உரை… ரொம்ப சிறப்பாக இருக்கும்… உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து…!

By Sri
Published on: September 4, 2024
---Advertisement---

நித்தியானந்தாவின் ஆன்மீக உரைகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்திருக்கின்றார்.

நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 4  மடங்களின் மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமிப்பதாக மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இது தொடர்பாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த 4 மடங்களையும் நியமிக்க தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தனது பெண் சீடர் உமாதேவிக்கு பொது அதிகாரம் வழங்கிய நித்தியானந்தா இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உமாதேவிக்கு வழங்கப்பட்ட பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் இருக்கின்றது. இது தொடர்பாக விசாரணை நடத்த நித்தியானந்தா ஆஜராக வேண்டும் என்று மனுதாரரிடம் நீதிபதி தெரிவித்திருந்தார்.

தற்போது நித்தியானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்று மனதார பதிலளித்தார். அதற்கு நீதிபதி நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரிய வேண்டும். அவரை காணொளி வாயிலாக ஆஜராக சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் அவர் ஆஜராக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மடங்களை நியமிக்க தக்கரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவில் தங்களால் தலையிட முடியாது என்று இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Celebrity Couple Sneha and Prasanna Criticized for Footwear During Sacred Girivalam in Thiruvannamalai

மேலும் நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை எனவும் நித்தியானந்தாவின் கதவை திற காத்து வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளது என்று காஞ்சி பெரியவர் கூறியது போல சன்னியாசி எப்போதும் சன்னியாசியாக இருக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!