திருப்பதியை சுற்றி கடும் மழை பெய்து வருகிறது. அது அருகில் உள்ள தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலும் எதிரொலித்துள்ளது.வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் குடியாத்ததில் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்துள்ளது.
இந்த கோவில் பாலாற்றின் அருகே கட்டப்பட்டதால் இந்த வீடு இடிந்து விழுந்துள்ளது. மண் அரிப்பு ஏற்பட்டு ஏற்கனவே வீடு விரிசல் விட்டதால் வீட்டு உரிமையாளர் நேற்றே வீட்டை காலி செய்து விட்டார்.
இன்று வீடு திடீரென இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பிரமாண்ட வீடு சரிவதை பார்க்கும்போது பேரதிர்ச்சியாக உள்ளது.
வேலூரில் சரிந்து விழுந்து வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட பிரம்மாண்ட வீடு..! #Vellore | #Gudiyatham | #HouseCollapse | #Floods | #HeavyRain pic.twitter.com/FvhpKP4cK5
— Polimer News (@polimernews) November 19, 2021













